
கோலாலம்பூர், மே 9 – சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரிலுள்ள 4 இடங்களில், புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை மேற்கொண்ட சோதனையில், சிறுவர்கள் உட்பட சுமார் 16 வெளிநாட்டு கட்டாய தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இச்சோதனையில், கட்டாய தொழிலாளர்கள் மீட்கப்பட்டதோடு, சட்டவிரோத குடியேற்றக் குற்றங்களுக்காக 45 வெளிநாட்டினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், அவர்களைக் கட்டாய தொழிலுக்கு உட்படுத்திய உள்ளூர் மேற்பார்வையாளர்களும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், மீட்கப்பட்ட அனைவரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக கோம்பாக், பிரிக்ஃபீல்ட் மற்றும் சுபாங் ஜெயா மாவட்ட காவல்த்துறை தலைமையகத்திடம் (IPD) ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று புக்கிட் அமான் D3 முதன்மை உதவி இயக்குநர் சோஃபியன் சாண்டோங் (Soffian Santong) கூறினார்.
தொடர்ந்து, இந்நடவடிக்கை, மலேசிய குடிவரவுத் துறை (JIM), மனிதவளத் துறை (JTK), மனித கடத்தல் எதிர்ப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் எதிர்ப்புத்துறை (MAPO) மற்றும் உள்துறை அமைச்சகத்தால் (KDN) மேற்கொள்ளப்பட்டது, என்று மேலும் தெரிவித்தார்