Latestமலேசியா

வெளியானது பரஞ்சோதி குரலில் “எலா எலேலோ” வைரல் பாடலின் மலாய்ப் பதிப்பு

கோலாலாம்பூர், மார்ச்-18-டிக் டோக்கில் வைரலான உள்ளூர் தமிழ்ப் பாடல் ‘எலா எலேலோ’ இப்போது மலாய் மொழியில் வெளியாகியுள்ளது.

பரஞ்சோதி மற்றும் சாரா ராமன் குரலில் ஒலிக்கும் இப்பாடலை KIRRTESH RECORDS வெளியிட்டுள்ளது.

யுவாஜி பாடலை எழுத, ரூபந்த் இயக்க, vkrn Empire தயாரித்துள்ளது.

தமிழ்ப் பாடலுக்கு அனைத்து தரப்பினரிடமிருந்தும் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து மலாயில் வெளியிட முடிவுச் செய்யப்பட்டதாக, சிலாங்கூர் சபாக் பெர்ணாமைச் சேர்ந்த பரஞ்சோதி வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.

கலைஞர்களின் படைப்புகளுக்கு விமர்சனங்கள் வருவது சகஜமான ஒன்றென்பதால், அதனை எதிர்கொண்டு மென்மேலும் மேம்படுத்திக் கொள்வதே சிறப்பு என்றார் அவர்.

அடுத்து வரக் கூடிய திட்டங்கள் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டார்.

இசை இரசிகர்கள் தனது படைப்புகளுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவர் என்ற எதிர்பார்ப்பையும் பரஞ்சோதி வெளியிட்டார்.

அசல் தமிழ்ப் பாடல் வைரலானதற்கு முக்கியக் காரணமாக விளங்கிய Thai beats மெட்டுக்களோடு, அழகான மலாய் வரிகளும் இணைய, இரசிகர்களை இது மிகவும் கவருகிறது.

இந்நிலையில் அதிகாரப்பூர்வ 4K வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

டிக் டோக் ஸ்டைலில், இளைஞர்களின் உற்சாகத்தை பிரதிபலிக்கும் இப்பாடல், மலேசியாவில் வேகமாக பிரபலமாகி வருகிறது.

YouTube தளத்திலும் இது வைரலாக பரவி வருகிறது.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!