பேங்கோக், ஜூலை-21 – தாய்லாந்தில் கைப்பேசிகளைப் பதிவுச் செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்ததால், அவ்வாறு செய்யத் தவறிய 2 மில்லியன்க்கும் மேற்பட்ட கைப்பேசி எண்கள் முடக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்துவதோடு, பதிவுச் செய்யப்படாத கைப்பேசி எண்கள் மூலம் மேற்கொள்ளப்படும் மோசடிகளைத் தடுக்கும் நோக்கிலும் அந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முடக்கப்பட்ட எண்கள் பெரும்பாலும், பதிவுச் செய்யப்படாத 6 முதல் 100 சிம் அட்டைகள் (SIM Card) வரை வைத்திருப்போருக்குச் சொந்தமானவையாகும்.
இன்னும் 30 முதல் 45 நாட்களுக்குள் அந்த சிம் கார்டுகள் பதியப்படவில்லையென்றால், சம்பந்தப்பட்ட கைப்பேசி எண்கள் முழுமையாக அழிக்கப்பட்டு, புதியவர்களிடம் விற்கப்படுமென தேசிய ஒளிபரப்பு மற்றும் தொடர்புத் துறை ஆணையம்(NBTC) எச்சரித்தது.
113 மில்லியன் வங்கிக் கணக்குகளுடன் தொடர்புப்படுத்தப்படும் 80 மில்லியன் கைப்பேசி எண்களை மீண்டுமொருமுறை சரிபார்க்குமாறு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடுப்பு அலுவலகம் அண்மையில் NBTC-யை உத்தரவிட்டிருந்தது.
வங்கிக் கணக்கு வைத்திருப்பவரும், கைப்பேசி சிம் கார்ட் உரிமையாளரும் அதே நபர்தானா என்பதை உறுதிச் செய்வதே அதன் நோக்கமாகும்.