Latestஉலகம்

வைரம் கொட்டிக் கிடக்கும் மெர்குரி கிரகம் ; எடுப்பது சாத்தியமில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள்

கோலாலம்பூர், ஜூலை 24 – சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் மெர்குரி (Mercury) அல்லது புதன் கிரகத்தின் நிலப்பரப்பிற்கு அடியில், 14 கிலோமீட்டர் ஆழத்திற்கு தடிமனான வைர அடுக்குகள் இருக்கலாம் என, நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) எனும் அறிவியல் சஞ்சிகையில் கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வு காட்டுகிறது.

சீனா மற்றும் பெல்ஜிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், அது தெரிய வந்துள்ளது.

அதிக அழுத்தம் மற்றும் சூரிய வெப்பத்தின் காரணமாக, புதன் கிரகத்தில் இருக்கும் கார்பன், சில்லிகா மற்றும் இரும்பு கலவை வைரங்களாக உருமாறி இருக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர்.

அந்த வைரத்தை பூமிக்கு கொண்டு வந்தால், மனிதர்கள் அனைவருமே செல்வந்தர்கள் ஆகிவிடலாம். அவ்வளவு வைரம் புதன் கிரகத்தில் கொட்டிக் கிடக்கிறது.

எனினும், அந்த வைரங்களை எடுப்பது சாத்தியமில்லை.

புதன் கிரகத்தின் அதீத வெப்பநிலை காரணமாகவும், நிலப்பரப்பிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்களுக்கு கீழே அந்த வைர அடுக்குகள் அமைந்திருப்பதாலும், அதனை வெட்டி எடுப்பது அவ்வளவு எளிதல்ல என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!