Latestமலேசியா

ஷங்ஹாய் செல்லும் வழியில் கேபின் அழுத்த கோளாறால் KLIA-வுக்குத் திரும்பிய மாஸ் விமானம்

செப்பாங், ஆகஸ்ட்-21 – கோலாலம்பூரிலிருந்து சீனாவின் ஷாங்ஹாய் செல்லும் வழியில் Malaysia Airlines விமான நிறுவனத்திற்குச் சொந்தமான MH386 விமானம், நேற்று KLIA-வுக்கு திருப்பியனுப்பப்பட்டது.

KL-லில் இருந்த இரவு 9.14 மணிக்கு புறப்பட்ட அவ்விமானத்தில் கேபின் அழுத்தப் பிரச்னை (cabin pressure issue) ஏற்பட்டதால், பாதுகாப்புக் கருதி அது KLIA-வுக்கே திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

வானில் 70 நிமிடங்கள் பறந்த பின் அது பாதுகாப்பாக KLIA-வில் தரையிறங்கியது.

முன்னதாக, ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரிலிருந்து கோலாலம்பூர் வந்து கொண்டிருந்த MH128 விமானமும் ஆஸ்திரேலியாவின் வடக்கே ASP விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!