ஷா ஆலாம், ஜூலை 3 – சிலாங்கூர், ஷா ஆலாம் அரங்கில், இன்னும் பயன்படுத்த முடிகின்ற நிலையில் இருக்கும் நாற்காலிகள், அம்மாநிலத்திலுள்ள, ஊராட்சி மன்றங்களுக்கும், மாவட்ட அலுவலகங்களுக்கும் இலவசமாக வழங்கப்படும்.
அந்த நாற்காலிகளை, மாவட்ட மைதானங்களில் பொருத்தலாம் என, சிலாங்கூர் மந்திரி பெசாரின் சமூக – வர்த்தகத் தொடர்பு பிரிவுத் தலைவர் அஹ்மாட் அஜ்ரி சைனால் நோர் (Ahmad Azri Zainal Nor) தெரிவித்தார்.
மறுசீரமைப்பு பணிகளுக்கு உட்படுதப்பட்டிருக்கும், ஷா ஆலாம் அரங்கிலுள்ள நாற்காலிகளை என்ன செய்ய போகிறீர்கள்? என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அந்த நாற்காலிகள் அனைத்தும் அகற்றப்பட்டு, அதில் சேதமடைந்த நாற்காலிகள் அழிக்கப்படும். நல்ல நிலையில் இருக்கும் நாற்காலிகள் மீண்டும் பயன்படுத்த ஏதுவாக பாதுகாத்து வைக்கப்படுமென, அஜ்ரி ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
ஷா ஆலாம் அரங்கில் 86 ஆயிரம் நாற்காலிகள் உள்ளன. அவை அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்ட பின் அந்த அரங்கை மறுசீரமைக்கும் கட்டுமான பணிகள் தொடங்கும்.
2029-ஆம் ஆண்டு, டிசம்பர் வாக்கில், ஷா ஆலாம் அரங்கின் கட்டுபான பணிகள் முழுமையான பூர்த்தியடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.