Latestமலேசியா

ஷா ஆலாம் அருகே ஆற்றங்கரையில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் கண்டெடுப்பு

ஷா ஆலாம், நவம்பர்-11 – ஷா ஆலாம், செக்ஷன் 35, அலாம் இம்பியான் அருகே ஆற்றங்கரை ஓரமாக அடையாளம் தெரியாத ஓர் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முழு ஆடைகளுடன் இருந்த அச்சடலத்தை, நேற்று மாலை 4 மணியளவில் பொது மக்கள் கண்டு போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.

அவரிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

உடலிலும் கைகலப்பு நடந்ததற்கான அறிகுறிகளோ அல்லது காயங்களோ காணப்படவில்லை என ஷா ஆலாம் போலீஸ் கூறியது.

மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய, ஷா ஆலாம் மருத்துவமனைக்கு சவப்பரிசோதனைக்காக சடலம் அனுப்பப்பட்டுள்ளது.

தற்போதைக்கு திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டு அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!