Latestமலேசியா

ஷா ஆலாம், சாலை சமிக்ஞை விளக்கில், நிறுவன இயக்குனர் கோடாரியால் தாக்கப்பட்டு கொள்ளை ; போலீஸ் விசாரணை

ஷா ஆலாம், ஜூலை 23 – சிலாங்கூர், ஷா ஆலாம், செக்‌ஷன் 33 சாலை சமிக்ஞை விளக்கில் காத்திருந்த நிறுவன இயக்குனர் ஒருவர் பதற்றமான தருணத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆடவர்கள், அந்த இயக்குனரின் புரோடுவா கெம்பாரா காரின் ஓட்டுனர் இருக்கை கண்ணாடியை கோடாரியால் அடித்து உடைத்து, அவரை கொள்ளையிட்டுச் சென்றதே அதற்கு காரணம் ஆகும்.

அச்சம்பவம் தொடர்பில், நேற்று பிற்பகல் மணி 2.41 வாக்கில், பாதிக்கப்பட்ட நபர் போலீஸ் புகார் செய்ததை, ஷா ஆலாம் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் முஹமட் இக்பால் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.

அந்த கொள்ளை சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று, சமூக ஊடகங்களிலும் வைரலாகியுள்ளது.

வங்கி ஒன்றிலிருந்து, சம்பந்தப்பட்ட நபர் இரண்டு லட்சம் ரிங்கிட் பணத்தை மீட்டுக் கொண்டு சென்ற போது, அக்கொள்ளை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த ஆடவன் ஒருவன், அவரது கார் கண்ணாடியை உடைத்த வேளை ; மற்றொருவன் பணப்பை தூக்கிக் கொண்டு கம்பி நீட்டி விட்டதாக கூறப்படுகிறது.

அதே சமயம், இயக்குனரின் காரை வழிமறித்து நின்ற மற்றொரு புரோடுவா அல்ஸா வாகனத்தில் வந்தவர்களும் தப்பி ஓடிவிட்டனர்.

எனினும், அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

கொள்ளையர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை போலீஸ் முடுக்கி விட்டுள்ளது. விவரம் அறிந்த பொதுமக்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!