Latestமலேசியா

‘ஷேர் தி லவ்’; சிங்கப்பூரில் இன்றிரவு சிட் ஸ்ரீராம் படைக்கும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

சிங்கப்பூர், ஜூலை-13 – தனது காந்தக் குரலால் குறுகிய காலத்திலேயே அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்ட கர்நாடக இசைக் கலைஞரும் பாடகருமான சிட் ஸ்ரீராம் இன்று சிங்கப்பூரில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.

‘அன்பைப் பகிர்வோம்’ (Share the Love) என்ற தலைப்பில் இன்றிரவு 7 மணி முதல் 10 மணி வரை சிங்கப்பூர் Expo Hall 7 மண்டபத்தை அவர் அதிர வைக்கவிருக்கின்றார்.

நான்காயிரம் பேர் அமரக் கூடிய அரங்கம் சிட் ஸ்ரீராமின் மெல்லிசையிலிருந்து அதிரடி பாடல்களால் நனையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாடகராக மட்டுமின்றி பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமைக் கொண்ட சிட் ஸ்ரீராமுடன் ஒரு மறக்க முடியாத மாலையை வழங்குவதில் பெருமிதம் கொள்வதாக ஏற்பாட்டு நிறுவனமான VZ Solutionz கூறியது.

வெறும் 34 வயதிலேயே இசைத் துறையில் பல்வேறு உச்சங்களைத் தொட்டு வருகிறார் சிட் ஸ்ரீராம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி, மராட்டி, ஆங்கில மொழிகளிலும் தனது இசையாலும் குரலாலும் அதகளப்படுத்தி வருகிறார்.

அவரது வசீகர குரலும் பாடல் வரிகளிலும் இருக்கும் ஒரு வித ஈர்ப்பு சக்தியும், இன்றைய இளைஞர்களை வசியப்படுத்தி கட்டிப் போட்டு வைத்துள்ளன.

சிட் ஸ்ரீ ராமின் இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கான
டிக்கெட்டுகளை SISTIC இணையத்தளத்தில் https://sistic.com.sg/events/sid0724 வாங்கிக் கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!