Latestமலேசியா

ஸ்தாபாக்கில் RM1.24 மில்லியன் மதிப்புள்ள சொகுசு கார்களை, சுங்கத் துறை பறிமுதல்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 26 – தலைநகர், செதாபாக்கிலுள்ள, உரிமம் பெற்ற கிடங்கு ஒன்றில், சுங்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கைகள், 1.24 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 16 சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த புதன்கிழமை, பிற்பகல் மணி 2.30 வாக்கில் அந்த சோதனை நடத்தப்பட்டதாக, மத்திய மண்டல சுங்க துறை உதவி இயக்குனர் நோர்லேலா இஸ்மாயில் (Norlela Ismail ) தெரிவித்தார்.

உரிமம் பெற்ற கிடங்கு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட அந்த சோதனை வாயிலாக, 48 மாதம் வைப்பு அனுமதி காலாவதியான பல இறக்குமதி வாகனங்கள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக நோர்லேலா சொன்னார்.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை, உரிமம் பெற்ற கிடங்கில் வைக்க 48 மாதம் வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், மொத்தம் 2.35 மில்லியன் ரிங்கிட் வரி மற்றும் இறக்குமதி வரியை உட்படுத்தியவை ஆகும்.

அதனால், அந்த வாகனங்களை இறக்குமதி செய்த நிறுவனத்திற்கு எதிராக, வரி ஏய்ப்பு தொடர்பில், 1967-ஆம் ஆண்டு சுங்கத் துறை சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!