Latestமலேசியா

ஸ்தாப்பாக்கில் பொறாமையால் மியன்மார் பெண் குத்திக் கொலை: முன்னாள் கணவர் கைது

கோலாலாம்பூர், ஏப்ரல்-24-கோலாலாம்பூர், ஸ்தாப்பாகில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் மியன்மார் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது முன்னாள் கணவரால் நேற்று குத்திக் கொலைச் செய்யப்பட்டார்.

பிற்பகல் 2:20 மணியளவில் பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் விரைந்த போலீஸார், அப்பெண் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டனர்.

தொடக்கக் கட்ட விசாரணையில், பொறாமை காரணமாக அவரது முன்னாள் கணவரால் இக்கொலை நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

அதே நாட்டைச் சேர்ந்த அவ்வாடவரை போலீஸார் அன்றைய தினமே கைதுச் செய்து, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் பறிமுதல் செய்தனர்.

இக்கொலை குறித்து குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தேக நபர் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!