மாட்ரிட், மே 24 – ஸ்பெயினின் பிரபல சுற்றுலாத் தீவான மல்லோர்காவிலுள்ள (Mallorca), உணவகம் ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், நால்வர் உயிரிழந்த வேளை ; இதர 21 பேர் பாடுகாயம் அடைந்தனர்.
அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் என அந்நாட்டின் அவசர சேவை பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களில், எழுவரின் நிலை கவலைக்கிடமாக உள்ள வேளை ; எஞ்சிய ஒன்பது பேர் படுகாயத்திற்கு இலக்காகி இருப்பதாக அவசர சேவை பிரிவு தனது X சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த இரண்டு மாடி கட்டட இடிபாடுகளில், இன்னும் யாரேனும் சிக்கிக் கொண்டுள்ளனரா என்பதை கண்டறிய, தேடி மீட்கும் பணிகள் தொடர்கின்றன.
இந்நிலையில், அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனது ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.