சிங்கப்பூர், ஏப் 18 – ஸ்பெய்னில் காணாமல்போன 39 வயதுடைய Audrey Fang Dirou என்ற சிங்கப்பூர் பெண் 30 க்கும் மேற்பட்ட கத்திக் குத்து காயங்களுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டார். கட்டிடக் கலைஞரான அவர் கடைசியாக உயிருடன் காணப்பட்ட ஹோட்டலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவே அவரது உடல் கண்டுப்பிடிக்கப்பட்டது. ஸ்பெய்னின் Murcia வட்டாரத்தில் Abania என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டி லோரியில் Audrey வின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டது.
Abania விலுள்ள நெடுஞ்சாலை ஓரத்திலுள்ள உணவகத்தில் பசியாறச் சென்ற நபர் ஒருவர் Audrey வின் உடலை கண்டார். அவரது படுகொலை தொடர்பாக ஆடவன் ஒருவன் கைது செய்யப்பட்டதாக ஸ்பெய்ன் போலீசார் தெரிவித்தனர். அந்த சந்தேகப் பேர்வழி ஏப்ரல் 16ஆம் தேதி கைது செய்யப்பட்டான். ஏப்ரல் 4ஆம் தேதியன்று தனியாக ஸ்பெய்னுக்கு சென்றிருந்த Audrey ஏப்ரல் 10 ஆம் தேதியிலிருந்து காணவில்லையென அறவிக்கப்பட்டிருந்தது. இன்னும் திருமணம் ஆகாமல் இருந்த அவர் ஏப்ரல் 12ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பியிருக்க வேண்டும். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் வெளிவிவகார அமைச்சில் புகார் செய்திருந்தனர்.