Latestமலேசியா

நேப்பாள வெள்ளப் பாதிப்பு; பினாங்கில் இந்து அறப்பணி வாரியம் சிறப்பு பிரார்த்தனை

ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-31,நேப்பாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.

பினாங்கு தண்ணீர்மலை அருள்மிகு ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் நடைபெற்ற இந்தப் பிரார்த்தனையில், வாரியத் தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான RSN ராயர், துணைத் தலைவரும் செனட்டருமான Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பெரு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் பாதுகாப்புக்காக இதில் பிராத்திக்கப்பட்டது.

இந்தப் பிரார்த்தனை எந்தவோர் இனம், மதம் அல்லது நாட்டினருக்கு மட்டும் உரியது அல்ல என்றும், பேரிடர் காலங்களில் மனிதநேயமும் ஒற்றுமையும் எல்லைகளைக் கடந்து நிற்க வேண்டும் என்றும் அறப்பணி வாரியம் அறிக்கையொன்றில் தெரிவித்தது.

மேலும், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்புப் படையினர், அவசரகால பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் வாரியம் தனது பாராட்டை தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட நேப்பாள நாட்டவர்களுக்கு பொது மக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவதுடன், உதவ விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நம்பகமான வழிகள் மூலம் உதவிகளை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

_“மனிதநேயம் இனம், மதம், நாடு என்ற எல்லைகளைக் கடந்தது”_ என்பதே இந்தப் பிரார்த்தனை நிகழ்ச்சியின் முக்கிய செய்தியாக அமைந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!