
காஜாங், ஜூலை 1- ஹூலு லங்காட், டுசுன் துவா (Hulu Langat, Dusun Tua) பகுதியில் சாலையைக் கடந்த விலங்கைத் தவிர்க்க முயன்றபோது, ரேஞ்ச் ரோவர் (Range Rover SUV) எஸ்யூவி வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து சுங்கை லங்காட் ஆற்றில் பாய்ந்தது.
காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டென் கமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யூசோப் (Naazron Abdul Yusof) கூறுகையில், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 48 வயது ஓட்டுநரும், 45 வயது பயணியும் ஹூலு லங்காட்டிலிருந்து ஜோகூருக்குச் சென்றுகொண்டிருந்துள்ளனர்.
வாகனம் ஆற்றில் விழுந்தபோது, இருவரும் மேற்கூரை வழியாக வெளியேறி காயமின்றி உயிர் தப்பினர் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த விபத்தில் எஸ்யூவி சேதமடைந்த நிலையில், வேறு எந்த வாகனத்திற்கும் அல்லது பொதுச் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



