கோலாலம்பூர், ஏப் 24 – லுமுட்டில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நேற்று வானில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு தொடக்கக் கட்ட உதவியாக 10,000 ரிங்கிட் வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அந்த குடும்பங்களுக்காக பொதுமக்களிடம் நிதி திரட்டுவற்காக சிறப்பு நிதி ஒன்றும் தொடங்கப்படும் என தற்காப்பு அமைச்சர் Khaled Nordin வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
இந்த விபத்தில் இறந்தவர்களின் உடல்களை விமானத்தில் அனுப்பிவைப்பது மற்றும் இறுதி சடங்கிற்கான அனைத்து செலவுகளையும் ஆயுதப் படைகள் ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் கூறினார். அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முதல் கட்ட அறிக்கையையும் அதனை தொடர்ந்து ஒரு மாதத்திற்குள் முழு அறிக்கையையும் வெளியிடும்படி விசாரணை குழுவுக்கு பணிக்கப்பட்டுள்ளதாக Khaled தெரிவித்தார்.