Latestமலேசியா

1 லட்சத்து 42 ஆயிரம் பேர் திவாலிலிருந்து விடுவிப்பு; மகத்தான சாதனையென பிரதமர் பெருமிதம்

புத்ராஜெயா, ஜூலை-25 – மடானி அரசாங்கம் அறிமுகப்படுத்திய இரண்டாவது வாய்ப்புக் கொள்கையின் கீழ் இதுவரை 1 லட்சத்து 42 ஆயிரத்து 510 பேர் திவால் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறு கடன்களுக்காக திவாலானோரில் 1 லட்சத்து 30 ஆயிரம் பேரை அப்பட்டிலியலிலிருந்து விடுவிக்கும் அரசாங்கத்தின் இலக்கை அது தாண்டியுள்ளது. 

நாடு சுதந்திரம் கண்டதிலிருந்து, எந்தவோர் அரசாங்கமும் செய்யாத ஒன்றை மடானி அரசு சாதித்திருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

தேவைப்படும் மக்களுக்கான சட்ட அமுலாக்கம் என்ற கொள்கைக்கு ஏற்ப அரசாங்கம் அறிமுகப்படுத்தியத் திட்டமே அதுவென பிரதமர் சொன்னார்.

திவால் நிலையென்பது சில நேரங்களில் பொருளாதாரச் சூழ்நிலையாலும் ஏற்படக்கூடும்; 

உதாரணத்திற்கு கோவிட் பெருந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர். சில சமயங்களில் சொந்த தவறுகளாலும் அவர்கள் திவாலாகின்றனர்.

ஆனால் பொருளாதாரத்தை உந்தச் செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பை அளிப்பது அரசாங்கத்தின் கடமையாகுமென தேசிய திவால் துறையின் நூற்றாண்டு விழாவைத் தொடக்கி வைத்து பேசிய போது டத்தோ ஸ்ரீ அன்வார் சொன்னார்.

இரண்டாம் வாய்ப்பின் மூலம்மறுவாழ்வுப்பெற்ற தனிநபர்களும் நிறுவனங்களும் மீண்டும் அத்தவற்றைப் புரியக் கூடாது.

மாறாக, தெக்குன், மாரா போன்ற பல்வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற பார்க்க வேண்டுமென பிரதமர் அறிவுரை வழங்கினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!