Latestஉலகம்

1.4 மில்லியன் பெண்களின் கல்வி வாய்ப்பை கெடுத்து குட்டிச்சுவராக்கியதே தலிபான் அரசின் மூன்றாண்டு கால சாதனை; யுனெஸ்கோ கடும் தாக்கு

பாரீஸ், ஆகஸ்ட்-15 – மத்திய ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில் 2021-ல் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்குத் திரும்பியதிலிருந்து, இதுவரை 1.4 million பெண்களுக்கு இடைநிலைக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒரு தலைமுறையின் எதிர்காலமே கேள்விக் குறியாகியிருப்பதாக, ஐநாவின் கல்வி அறிவியல் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ (UNESCO) கவலைத் தெரிவித்துள்ளது.

ஆரம்பக் கல்வி வாய்ப்பும் கணிசமாக சரிந்துள்ளது; வழக்கத்தை விட 1.1 millionக்கும் குறைவான மாணவ மாணவியரே பள்ளிகளுக்குச் செல்கின்றனர்.

இதனால் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் பால்ய திருமணங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கலாமென UNESCO பீதியைக் கிளப்புகிறது.

தலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றி இன்றோடு மூன்றாண்டுகள் நிறைவடைகின்றன.

ஆனால், அந்நாட்டில் 20 ஆண்டுகளாக முன்னேற்றம் கண்டு வந்த கல்வியை இந்த மூன்றே ஆண்டுகளில் தலிபான்கள் குட்டிச் சுவராக்கி விட்டதாக UNESCO சாடியது.

உலகில் வேறெந்த நாட்டாலும் அங்கீகரிக்கப்படாத தலிபான் அரசாங்கம், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

உலகிலேயே, பெண்கள் இடைநிலைப் பள்ளிகளுக்குச் செல்லவும் பல்கலைக்கழகங்களில் மேற்கல்வி பயிலவும் தடை விதிக்கும் ஒரே நாடு ஆப்கானிஸ்தான் மட்டுமே. 

இது ஒருபாலினவெறிஎன ஐநா சாடுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!