
கோலாலம்பூர், டிசம்பர்-7, இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களது நேரடி செய்திகளை (direct message) அட்டவணை செய்து அனுப்பும் வசதியை அந்த சமூக ஊடகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
செய்தியை அனுப்பும் பட்டனை நீண்ட நேரம் அழுத்தினால் அட்டவணைக்கான தேர்வுகள் (Schedule Options) காட்டப்படும்.
அதில் தாங்கள் விரும்பும் தேதியையும் நேரத்தையும் பயனர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.
அவர்களின் தேர்வுக்குகேற்ப செய்தி போய் சேருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.