கோத்தா கினாபாலு, ஜூலை-13 – பத்தாண்டுகள் வரை செல்லுபடியாகும் கடப்பிதழ்களை வெளியிட உள்துறை அமைச்சு தயாராக உள்ளது.
ஆழமான ஆய்வுகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்தாய்வுகளின் அடிப்படையில் மலேசியா அதற்கு தயாராகியுள்ளதாக அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசுத்தியோன் இஸ்மாயில் (Datuk Seri Saifuddin Nasution Ismail) தெரிவித்தார்.
எனினும் இது எப்போது அமுலுக்கு வருமென்பதை பின்னர் அறிவிப்போம் என்றார் அவர்.
பத்தாண்டு காலத்திற்கு செல்லுபடியாகும் கடப்பிதழ்கள் ஒன்றும் புதிய விஷயமல்ல; ஏற்கனவே தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனீசியா, ஃபிலிப்பின்ஸ் போன்ற அண்டை நாடுகளில் பழக்கத்தில் உள்ள ஒன்றுதான் என அமைச்சர் சொன்னார்.
நடப்பில், மலேசியக் கடப்பிதழ்களின் செல்லுபடியாகும் காலம் ஐந்தாண்டுகளாகும்.
இதனிடையே, பாதுகாப்பு அம்சத்தில் மலேசிய அனைத்துலகக் கடப்பிதழ்கள் உலகளவில் 12-வது இடத்திலும் ஆசியாவில் ஐந்தாவது இடத்திலும் இருப்பது நமக்கெல்லாம் பெருமையே என சைஃபுடின் கூறினார்.