கோலாலம்பூர், ஆகஸ்ட்-6 – 10 மாத குழந்தையைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதன் பேரில், குழந்தைப் பராமரிப்பாளரின் மகன் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான்.
ஜூலை 31-ஆம் தேதி டாங் வாங்கி, ஜாலான் ஹம்சா கம்போங் பாருவில் உள்ள வீட்டில் வைத்து அக்குற்றத்தைப் புரிந்ததாக, 20 வயது அவ்விளைஞன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
எனினும், 2017 சிறார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அம்மாணவன் மறுத்தான்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறையும், பிரம்படியும் விதிக்க அச்சட்டம் வகை செய்கிறது.
6,000 ரிங்கிட் அபராதம், மற்றும் சில கூடுதல் நிபந்தனைகளுடன் நீதிபதி அவ்விளைஞனை ஜாமீனில் விடுவித்தார்.
செப்டம்பர் 24-ங்காம் தேதி வழக்கு செவிமெடுப்புக்கு வருகிறது.