கெர்லிங், மே 2 – 104 ஆண்டுகளாக உலு சிலாங்கூரில் செயல்பட்டு வரும் கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று டத்தோ ஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் கேட்டுக் கொண்டார்.
தமிழ்க் கல்வி, தமிழ்ப்பள்ளி மேம்பாடு ஆகியவற்றில் மடானி அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று அவர் உறுதியளித்திருக்கிறார்.
நேற்று கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடந்த சந்திப்புக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட அவர், பள்ளியின் சீரமைப்புப் பணி மற்றும் மேம்பாடு குறித்து கேட்டறிந்தார்.
அப்பள்ளியில் மாணவர் தங்கும் விடுதி செயல்படுவதையும் அறிந்து வெகுவாக பாராட்டிய டத்தோ ஸ்ரீ வான் அசிசா, எதிர்காலத்தில் அத்திட்டம் சிறப்பான மாணவர்களை உருவாக்க வழிவகுக்கும் என்றார்.
இதனிடையே, அப்பள்ளியின் நிலவரம் குறித்து பள்ளி வாரியத் தலைவர் குமரன் மாரிமுத்து வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டார்.
Interview
நேற்று நடைபெற்ற அச்சந்திப்பில், கல்வி அமைச்சர் பட்லினா சிடேக், தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் சத்தியபிரகாஷ், புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் தீபன் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.