ஈப்போ, ஜூன் 6 – தண்டனை நிறைவேற்றிய மற்றும் அபராதம் செலுத்திய பின் பேரா Langkap குடிநுழைவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 121 சட்டவிரோத குடியேறிகள் நேற்று அவர்களது தாயகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
76 ஆடவர்கள், 37 பெண்கள், ஆறு சிறுவர்கள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் Sepangகிலுள்ள KLIA அனைத்துலக விமான நிலையத்தின் மூலம் அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பேரா குடிநுழைவுத் துறையின் இயக்குனர் மியோர் ஹெஸ்புல்லா மியோர் அப்துல் மாலிக் ( Meor Hezbullah Meor Abdul Malik ) தெரிவித்தார்.
அவர்களில் இருவர் ஒரு மாத குழந்தைகள், மற்றவர்கள் 55 வயதுக்குட்பட்டவர்களாவர். 1959 மற்றும் 1963 ஆம் ஆண்டின் குடிநுழைவு சட்டத்தின் கீழ் அவர்கள் அனைவரும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டனர். குடிநுழைவுத் துறையின் கறுப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளதால் அவர்கள் மீண்டும் மலேசியாவுக்கு வரமுடியாது என மியோர் ஹஸ்புல்லா கூறினார்.