கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நாவன்மைக்கு நல்லதொரு களமாக 2011ஆம் ஆண்டு முதல் வணக்கம் மலேசியாவின் ஏற்பாட்டில் தேசிய அளவிலான மாணவர் முழக்கம் நடைபெற்று வருகிறது.
அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு அனைத்துலக மாணவர் முழக்கமாக தனது சிறகை விரித்து வெற்றிகரமாக 8 ஆண்டுகள் இப்போட்டி நடைப்பெற்று வருகிறது.
அவ்வகையில், மீண்டும் இவ்வாண்டு 12வது முறையாக மலர்ந்து விட்டது தேசிய ரீதியிலான மாணவர் முழக்கம். அதன் பதிவு இன்று முதல் ஆகஸ்டு 31ஆம் திகதி வரை நடைப்பெறவிருக்கிறது.
தமிழ்ப்ப்ள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் பேச்சாற்றலையும் சிந்தனையாற்றலையும் வளர்க்கும் ஓர் உந்து தளமாக செயலாற்றிவருகிறது மாணவர் முழக்கம் என்கிறார் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் தலைமை அமைப்பாளரும் மாணவர் முழக்கத்தின் ஆலோசகருமான பாஸ்கரன் சுப்பிரமணியம்.
தேசிய அளவில் தொடக்கம் காணவுள்ள 12ஆவது மாணவர் முழக்கம், விரைவில் அனைத்துலக நிலையிலும் நடைபெறும் என்று வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் முத்துசாமி தெரிவித்தார்.
முத்து முத்தான முத்தமிழில் சிறந்த தொடக்கப் பள்ளி வித்தகர்களுக்காக, 12 ஆவது முறையாக மலர்ந்துள்ள தேசிய அளவிலான மாணவர் முழக்கத்திற்கான பதிவு காலம் இன்று முதல் ஆரம்பமாகிறது.
விருப்பமுள்ளவர்கள், டிக்டோக், Facebook, Instagram, Telegram, X ஆகிய சமூக வலைத்தளங்களில் உள்ள description-களில் மாணவர் முழக்கத்திற்கான பதிவு பாரத்தின் இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.
10 வயது முதல் 12 வயது வரை தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவரா நீங்கள்? இன்றே முத்தமிழோடு களம் காண பதிவு செய்யுங்கள்!
மேல் விவரங்களுக்கு, வணக்கம் மலேசியாவைச் சமூக வலைத்தளங்களில் பின்தொடருங்கள்!