கோத்தா கினாபாலு, ஆகஸ்ட் -5, கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு தற்போது வலுவாக இருப்பதாக பிரதமர் கூறியிருக்கிறார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் சிறந்த கொள்கை மற்றும் கூட்டாக நாட்டை மேம்படுத்தும் முயற்சியின் பலனே அதுவென டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெருமிதம் தெரிவித்தார்.
பாதாள வீழ்ச்சியை நோக்கிச் செல்வதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்ற அதே ரிங்கிட் தான், இந்த ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் மீட்சிடைந்து வருகின்றது.
ஆசியாவிலேயே வலுவான நாணயமாக ரிங்கிட் உள்ளது.
அதற்கு காரணம் அன்வார் அல்ல; மாறாக ஒற்றுமை அரசாங்கத்தின் கொள்கையே என பிரதமர் சொன்னார்.
முதலீட்டாளர்களின் வருகையும் முன்பெப்போதும் இல்லாத அளவுக்கு கணிசமான அளவில் இருக்கிறது.
மலேசியா இவ்வட்டாரத்தின் ஜாம்பவான் நாடாக மாறி வருவதை அது காட்டுவதாக பிரதமர் கூறினார்.
கோத்தா கினாபாலுவில் சபா கெஆடிலான் கட்டிசியின் பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்து பேசுகையில் டத்தோ ஸ்ரீ அன்வார் அதனைக் குறிப்பிட்டார்.