Latestமலேசியா

14 வயது சிறுவன் இரு சகோதரர்களுடன் கார் ஓட்டும் காணொளி வைரல்; குடும்பத்தை அடையாளம் கண்ட போலிசார்

கோலாலம்பூர், ஜூலை 30 – செப்பாங்கிலுள்ள வீடமைப்பு பகுதி ஒன்றில் 14 வயது சிறுவன் தனது இரு சகோதரர்களுடன் புரோடுவா விவா கார் ஓட்டிச் செல்லும் இரண்டு நிமிட காணொளி சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுந்தகவல் சேவை செயலியில் வைரலானதை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அந்த சிறுவனின் பெற்றோர்கள் அடையாளம் காணப்பட்டதோடு விசாரணைக்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோ யுஸ்ரி ஹசான் பஸ்ரி ( Datuk Seri Mohd Yusri Hassan Basri ) தெரிவித்தார்.

இதற்கு முன் அந்த சிறுவன் ஓட்டிச் சென்ற காரை பொதுமக்களில் ஒருவர் தடுத்த சம்பவம் தொடர்பான காணொளி வைரலானது. பெரியவர்கள் எவருமின்றி அந்த சிறுவன் கார் ஓட்டிச் சென்றதை இதற்கு முன் பலர் பார்த்துள்ளனர். அந்த சிறுவன் ஓட்டிச் சென்ற கார் வேக தடுப்பை கடந்து செல்வதற்கு முன் அக்காரை நிறுத்தும்படி பெண் ஒருவர் கேட்கும் காட்சியும் அந்த காணொளியில் காண முடிகிறது. அந்த சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்யும் அப்பெண் , காரை ஒட்டும் சிறுனிடம் அவனது படிப்பு மற்றும் வயதையும் வினவுகிறார். மேலும் இது குறித்து போலீசில் புகார் செய்யப்போவதாகவும் அவர் கூறுகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!