சென்னை, டிசம்பர்-11 – 145 பயணிகளுடன் தமிழகத்தின் சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தில் எரிபொருள் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், எரிபொருள் கசிவு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு விமானத்தின் புறப்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
விமானத்தில் எரிபொருள் கசிவை சரிசெய்யும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.