Latestஉலகம்

16 வயதில் உலக சாதனை: உலகின் மிக இள வயது பட்டயக் கணக்காய்வாளர் ஆனார் லக்ஷ்மணன்

துபாய், ஆகஸ்ட்-19-ஐக்கிய அரபு சிற்றரசின் துபாயில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது இளைஞர் லக்ஷ்மணன் மெய்யப்பன், உலகின் மிக இளம் வயது பட்டயக் கணக்காய்வாளர் அதாவது Chartered Accountant என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.

​16 வயது 141 நாட்களில் இந்த வரலாற்றுச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

​கோவிட்-19 பெருந்தொற்று பொதுமுடக்கக் காலத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வை முடித்த பின்னர், பட்டயக் கணக்காய்வாளரான தனது தாயாரின் வழிகாட்டலில் இவர் கணக்கியல் துறையில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

​15-வது வயதில் ACCA தகுதிப் படிப்பைத் தொடங்கிய லக்ஷ்மணன், கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வெறும் ஓராண்டுக்குள் அனைத்துத் தேர்வுகளையும் வெற்றிகரமாக முடித்தார்.

​அதனைத் தொடர்ந்து CFA பட்டயத்தையும் வென்ற அவர், தற்போது நிதித்துறையில் முதுகலை பட்டம் படித்து வருகிறார்.

​தற்போது துபாயில் உள்ள முதலீட்டு நிறுவனம் ஒன்றில் மூத்த ஆய்வாளராகப் பணியாற்றி வரும் இவர், சாதனைகளுக்காக இல்லாமால் ஆர்வத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து கற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!