குவந்தான், ஜூன் 18 – குவந்தானில் போதைப் பொருள் விநியோகிப்பாளர் என நம்பப்படும் ஆடவன் ஒருவனை கைது செய்த போலீசார் 173,000 ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். கிளந்தானைச் சேர்ந்த 39 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழி ஓட்டிச் சென்ற வாகனத்தில் சோதனை செய்தபோது 56 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக பஹாங் போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் ( Noor Hisam Nordin) தெரிவித்தார்.
அந்த ஆடவன் அண்டை நாட்டிலிருந்து போதைப் பொருள் கடத்தி வந்ததோடு கடந்த ஒரு ஆண்டு காலமாக குவந்தான் வட்டாரத்திற்கு போதைப் பொருள் விநியோகித்து வந்தது கண்டறியப்பட்டது. அந்நபர் ஒரு போதைப் பித்தர் என்பதோடு ஏற்கனவே போதைப் பொருள் தொடர்பான 13 குற்றப் பின்னணிகளையும் கொண்டுள்ளான். அவனுக்கு எதிராக அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால் இம்மாதம் 22ஆம்தேதிவரை க தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நோர் ஹிசாம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.