Latestமலேசியா

18 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி: டென்மார்க் ஓபனில் பட்டம் வென்று பெர்லி–தீனா வரலாற்றுச் சாதனை

கோப்பன்ஹேகன், அக்டோபர்-19,டென்மார்க் பொது விருதுப் பூப்பந்துப் போட்டியில், மலேசியாவின் முன்னணி மகளிர் இரட்டையர் ஜோடியான பெர்லி தான் – தீனா முரளிதரன் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

இதன் மூலம், இப்போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கான மலேசியாவின் 18 ஆண்டு காலக் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.

நேற்றைய இறுதியாட்டத்தில், உலகத் தரவரிசையில் ஐந்தாவது இடத்திலுள்ள பெர்லி – தீனா ஜோடி, ஜப்பானின் Hinata Suzuki-Nao Yamakita  ஜோடியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், மலேசிய ஜோடி 21-18, 21-11 என்ற நேரடி செட் கணக்கில், வெறும் 36 நிமிடங்களில் வெற்றியைப் பதிவுச் செய்தது.

இதற்கு முன்னர், ஆகக் கடைசியாக 2008-ஆம் ஆண்டு மலேசியாவின் Wong Pei Tty-Chin Eei Hui ஜோடி இப்பட்டத்தை வென்றிருந்தது.

தவிர, டென்மார்க் பொது பூப்பந்துப் போட்டியின் 90 ஆண்டுகால வரலாற்றில் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்ற இரண்டாவது மலேசிய ஜோடி என்ற பெருமையையும் பெர்லி – தீனா பெற்றுள்ளனர்.

கடந்த ஜனவரியில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்ற இவர்கள், தற்போது இவ்வாண்டின் இரண்டாவது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!