Latestமலேசியா

2027 பட்ஜெட்: 2,000 தம்பதிகளுக்குக் கருத்தரிப்பு சிகிச்சை மானியம்; குடும்பங்களுக்கு விரிவாக்கப்பட்ட வரிச் சலுகைகள் – நேன்சி

கோலாலம்பூர், அக்டோபர்-14 – குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் வகையில் கருத்தரிப்பு சிகிச்சை மற்றும் குடும்பப் பராமரிப்புச் செலவுகளுக்கு உதவும் நடவடிக்கைகள், 2027 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதை, மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு வரவேற்றுள்ளது.

குடும்பங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆதரவு பெறுவதுடன், இத்தகைய தடுப்புச் சுகாதார உதவிகள் பல குடும்பங்களுக்கு நிம்மதி தரும் என அமைச்சர் டத்தோ ஸ்ரீ நேன்சி ஷுக்ரி கூறினார்.

தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியமான LPPKN-னின் ‘BuAi’ திட்டத்தின் கீழ், தகுதியுடைய 2,000 தம்பதிகளுக்கு IUI கருத்தரிப்பு சிகிச்சைக்காக ஒரு சுழற்சிக்கு RM2,000 வரை மானியம் வழங்கப்படுகிறது; இதற்கு, குடும்பத்தின் மாத வருமானம் RM10,000-க்கும் குறைவாகவும், மனைவியின் வயது 37-க்குக் குறைவாகவும் இருக்க வேண்டும்.

மேலும், ஆண்களுக்கான நலச் சேவைகள் மற்றும் விழிப்புணர்வு மூலம் 42,000 பேரைச் சென்றடையவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தனிநபர் வருமான வரி விலக்குச் சலுகையில் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்புச் செலவுகளும் சேர்க்கப்படுகின்றன.

அதோடு, பெற்றோர் மற்றும் தாத்தா-பாட்டிக்கான பராமரிப்புச் செலவுகளுக்கும் வரிச் சலுகை வழங்கப்படுகிறது;

தவிர, தலசீமியா மரபணுவைக் கொண்டவர்களின் குடும்பத்தினருக்கு இலவசப் பரிசோதனைகளும் விரிவுபடுத்தப்படவுள்ளன.

இத்திட்டங்கள் குடும்பங்களின் நிதிச் சுமையைக் கணிசமாகக் குறைப்பதுடன் அவர்களின் நல்வாழ்வுக்கும் உறுதுணையாக இருக்கும் என அமைச்சர் நேன்ஸி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!