Latestமலேசியா

18 மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கிய மலாயா பல்கலைக்கழக இந்திய முன்னாள் மாணவர் சங்கம் (PANI UM)

நிதி உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், மலாயா பல்கலைக்கழக இந்திய முன்னாள் மாணவர் சங்கமான PANI UM புதிய நிதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூகத்தினரிடையே சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பதும் அதன் நோக்கமாகும்.

அத்திட்டத்தின் முதல் கட்டமாக, 18 மாணவர்களுக்கு தலா 500 ரிங்கிட் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மலாயா பல்கலைக்கழகத்தில் உதவி தேவைப்படும் மாணவர்காக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அங்கீகரித்த 10,000 ரிங்கிட் நிதிப் பங்களிப்பும் அத்திட்டத்திற்குக் கிடைத்துள்ளது.

அத்திட்டம் உருவாக ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய மலாயா பல்கலைக்கழக நிர்வாக வாரியத்துக்கு PANI UM நன்றி தெரிவித்துக் கொண்டது. PANI UM மற்றும் மலாயா பல்கலைக்கழகம் இணைந்து செயல்படுத்தும் UM Giving வாயிலாக நிதி நிர்வாகம் கையாளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு நிறுவப்பட்ட PANI UM, முன்னாள் மாணவர்களின் பொறுப்பு பட்டப்படிப்புடன் முடிவடைவதில்லை என்றும், பல்கலைக்கழகத்துக்கும் அடுத்த தலைமுறை மாணவர்களுக்கும் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. நன்கொடைகள் முறையாகவும் பொறுப்புடனும் நிர்வகிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் இந்நிதியம் செயல்படும் என்றும் அது கூறியது.

இதனிடையே மாணவர்களுக்கு இத்தகைய உதவித்தொகை வழங்குவது மிக முக்கியம் என PANI UM மலாயா வாழ்நாள் உறுப்பினர் டத்தோ ஶ்ரீ டாக்டர் A. தெய்வீகன் தெரிவித்தார்.

இவ்வேளையில் இந்த உதவித்தொகை குறித்து PANI UM தலைவர் சிவ பாலன் தாமோதரன் விளக்கினார்.

இத்தகைய உதவித்தொகை முதல் முறையாக கிடைத்திருப்பதாக UM Giving இயக்குனர் பேராசிரியர் டாக்டர் Azni Zarina binti Taha குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த உதவித்தொகை தங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என சில மாணவர்கள் இவ்வாறு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிதித் திட்டத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒப்புதல் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வரிவிலக்குக்குத் தகுதி பெறும்.

அந்நிகழ்வில் PANI UM ஆலோசகர் அம்பிகாபதி ரத்னம், கல்வி மற்றும் அனைத்துலக உதவித் துணை வேந்தர் பேராசிரியர் Yvonne Lim ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!