Latestஉலகம்விளையாட்டு

1986 உலகக் கிண்ண ‘தங்கப் பந்து’ கோப்பை பிரான்சில் ஏலத்தில் விடப்படுவதைத் தடுக்க மரடோனாவின் வாரிசுகள் முயற்சி

பிரான்ஸ், மே-24 – மறைந்த உலகக் கால்பந்து சகாப்தம் டியேகோ மரடோனாவின் ‘தங்கப் பந்து’ கோப்பை விற்பனையைத் தடுக்கும் முயற்சியில், அவரின் வாரிசுகள் பிரான்சில் சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

அது 1986-ஆம் ஆண்டு மெக்சிக்கோவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் போது சிறந்த ஆட்டக்காரர் என்ற வகையில் மரடோனாவுக்கு வழங்கப்பட்டதாகும்.

ஆனால், பல தசாப்தங்களாக எப்படியோ காணாமல் போன அக்கோப்பை, பிறகு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பழங்கால பொருட்களை விற்கும் வியாபாரியால் கண்டெடுக்கப்பட்டது.

உலகப் புகழ்ப் பெற்ற அக்கோப்பை பாரீசிக்கு சற்று தொலைவில் உள்ள இடமொன்றில் வரும் ஜூன் 6-ஆம் தேதி ஏலத்தில் விடப்படவிருக்கிறது.

உலகின் பட்டித் தொட்டி எங்கும் தனது பெயர் பிரபலமாகும் அளவுக்கு கால்பந்து வாழ்க்கையில் சாதித்து விட்டு மரடோனா விட்டுச் சென்ற பொருட்களில் ஒன்றான அக்கோப்பை, நிச்சயம் லட்சக்கணக்கில் ஏலத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், அக்கோப்பை மரடோனாவின் ஐந்து வாரிசுகளுக்கே சொந்தம் என்றும், அதனை விற்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் வழக்கறிஞர்கள் மூலமாக பிரான்சில் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

1986-ஆம் ஆண்டு மரடோனாவுக்கு வழங்கப்பட்ட அக்கோப்பை மூன்றாண்டுகள் கழித்து Naples-சில் மேற்கொள்ளப்பட்ட வங்கிக் கொள்ளையின் போது திருடுப் போனதாக அவரின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

அது திரும்பக் கிடைத்து ஏலத்தில் விடப்படவிருக்கும் தகவல் தங்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் தெரிய வந்ததாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு எல்லா உரிமையும் தங்களுக்கு உண்டு என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

அது மரடோனாவின் குடும்பத்துக்கு வேண்டும்; அர்ஜேண்டினா மக்களுக்கு வேண்டும் என நீதிமன்றத்தில் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த ஏலம் தொடருமா அல்லது மரடோனாவின் குடும்பம் தனது முயற்சியில் வெற்றிப் பெறுமா என்பதை மே 30-ஆம் தேதி நீதிமன்றம் முடிவுச் செய்யவிருக்கிறது.

உலகம் கண்ட மாபெரும் கால்பந்து வீரரான பிரேசிலின் பெலிக்கு ஈடாக போற்றப்படும் மரடோனா, 2020-ல் தனது 60-வது வயதில் காலமானார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!