
கோலாலம்பூர், பிப்ரவரி-27,பதிவு தொடங்கிய இரண்டு வாரங்களுக்குள், சுமார் 50,000 ஆறு வயது குழந்தைகள் 2027 ஆம் ஆண்டில் முதல் வகுப்பில் நுழையப் பதிவுச் செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் புதிய கல்விக் கொள்கைக்கு பெற்றோர்கள் வலுவான ஆதரவு அளித்து வருவதை இது காட்டுவதாக, கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் தெரிவித்தார்.
நாட்டிலேயே ஜோகூர் மாநிலத்தில் தான் அதிகமான மாணவர்கள் பதிந்துகொண்டுள்ளனர்.
இது பெற்றோர்கள் புதிய கொள்கையை ஏற்றுக்கொள்ளும் தயார்நிலையை காட்டுகிறது.
2026–2035 கல்விப் பெருந்திட்டத்தின் படி குழந்தைகள் இப்போது 6 வயதிலேயே ஆரம்பப்பள்ளியில் சேர முடியும்.
இதன் நோக்கம் ஆரம்பக் கல்வியை வலுப்படுத்தி, எதிர்கால சவால்களுக்கு மாணவர்களை தயார் செய்வதாகும்.
என்றாலும், குழந்தைகள் கல்வி தொடங்குவதற்கு முன், அவர்கள் உணர்ச்சி மற்றும் சமூக ரீதியாக தயாராக இருப்பதை பெற்றோர்கள் உறுதிச் செய்ய வேண்டும் என அதிகாரிகள் நினைவுறுத்தியுள்ளனர்.



