Latestமலேசியா

2 நாட்களுக்கு இலவச டோல் சலுகை ; போக்குவரத்து அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்ப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 8 – ஹரி ராயா கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் வாகனமோட்டிகள், இலவச சாலைக் கட்டண சலுகையை பெறலாம்.

அதனை தொடர்ந்து, நாட்டிலுள்ள நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்று காலை மணி எட்டு நிலவரப்படி, போக்குவரத்து சீராக இருப்பதாக, LLM – மலேசிய நெடுஞ்சாலை வாரியம் கூறியுள்ளது.

குறிப்பாக, நாட்டின் கிழக்குகரை மாநிலங்களை நோக்கிச் செல்லும் LPT1 மற்றும் LPT2 நெடுஞ்சாலைகளில், போக்குவரத்து சீராக உள்ளது.

எனினும், கேஎல்-காராக் நெடுஞ்சாலையில், கெந்திங் செம்பா சுரங்க நுழைவாயிலுக்கு அருகே, வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன.

போக்குவரத்து நிலவரம் குறித்த மிக அண்மைய தகவல்களை அறிந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள், மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் சமூக ஊடகங்களை வலம் வரலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!