
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 22 — கடந்த வாரம் தனது இரண்டு மாதக் குழந்தையின் மரணத்திற்கு தனது அலட்சிய போக்குதான் காரணமென ஒப்புக்கொண்ட இந்தோனேசியப் பெண்ணுக்கு, நீதிமன்றம் இன்று 2,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.
36 வயதான அம்மாது பேராக் கம்போங் சுங்கை டூவா, கோத்தா செத்தியாவிலுள்ள தமது வீட்டில் நடந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த குழந்தையைத் தவிர மேலும் ஆறு பிள்ளைகள் அவருக்கு உள்ளதால் அவருக்கு குறைந்தபட்ச அபராதம் மட்டுமே விதிக்கப்பட வேண்டும் என்று அம்மாதுவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரினார்.
தனது கணவருடன் 2022ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் வசித்து வரும் அந்நபர் குறைந்த வருமானம் பெரும் செம்பனைத் தோட்ட தொழிலாளி என்று அறியப்படுகின்றது.