கோலாலம்பூர், மே-8,
சுமார் 2 லட்சம் ரிங்கிட்டுக்கு தாம் வருமான வரி பாக்கி வைத்திருப்பதாக அவதூறு பரப்பியதாகக் கூறி, பாகான் டாலாம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி மீது ஒற்றுமைத் துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி போலீசில் புகார் செய்துள்ளார்.
சரஸ்வதியிடம் இருந்து வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டிருப்பதை புத்ராஜெயா போலீஸ் தலைவர் A Asmadi Abdul Aziz உறுதிபடுத்தினார்.
விசாரணைக்கான ஆணைப் பெறப்பட்டதும், குற்றவியல் சட்டம் மற்றும் தொடர்பு-பல்லூடகச் சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கைத் திறக்கப்படும் என்றார் அவர்.
PKR கட்சியின் உதவித் தலைவருமான சரஸ்வதி, 2010 முதல் 2020 வரை பத்தாண்டுகளாக வருமான வரி பாக்கி வைத்திருப்பதாக முன்னதாக வதந்திகள் பரவின.
அவற்றைத் திட்டவட்டமாக மறுத்திருந்த அவர், அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறியிருந்தார்.