பட்டர்வெர்த், மே 7 – பட்டர்வெர்த்தில் தயாரிப்பு தொழிற்சாலையில் ladle craneனில் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டபோது 20 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் மேலாளர் ஒருவர் மரணம் அடைந்தார்.
அந்த தொழிற்சாலையின் தொழிலாளர்கள் Ladle Craneனில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அதனை மேற்பார்வையிட்ட 51 வயதுடைய அவர் கீழே விழுந்தார் என முன்னோடி விசாரணையில் தெரியவந்ததாக பினாங்கு வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் இயக்குனர் Hairozie Asri
தெரிவித்தார்.
இது குறித்து தகவல் கிடைத்தவுடன் பினாங்கு வேலையிட பாதுகாப்பு சுகாதார சுகாதாரத்துறையின் விசாரணை அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணையை மேற்கொண்டதாக அவர் கூறினார்.
விசாரணை முடியும்வரை அந்த தொழிற்சாலை பகுதியில் வேலையை நிறுத்துவதற்கான உடனடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக Hairozie தெரிவித்தார்.
மேலும் இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக உள்கட்ட விசாரணையை நடத்தும்படி அந்த தொழிற்சாலையின் நிர்வாகம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளிடம் அறிக்கைகளை பதிவு செய்த பின் பினாங்கு வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையான Dosh விசாரணை மேற்கொள்ளும். பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதை உறுதிப்படுத்த தொடர்ந்து அந்த தொழிற்சாலைக்கு மாநில Dosh அதிகாரிகள் வருகை புரிவார்கள் என்றும் Hairozie கூறினார்.