
பெர்லின், மார்ச்-24-பூமி வெப்பமடைதல் எதிர்பார்த்ததை விட வேகமாக நடைபெறுவதாக, அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
2015 முதல் கடந்த 10 ஆண்டுகளில், உலக வெப்பநிலை சராசரியாக 0.35 பாகை செல்சியஸ் உயர்ந்துள்ளது.
இது கடந்த 50 ஆண்டுகளில் பதிவான 0.2 பாகை செல்சியஸ் உயர்வை விட மிக அதிகம் என, ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
NASA, NOAA உள்ளிட்ட 4 முக்கிய தரவுத் தளங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், El Nino, எரிமலை வெடிப்பு, சூரிய வெப்பம் போன்ற இயற்கை நிகழ்வுகள் இதற்கு காரணமாக இல்லை என்பதை கண்டறிந்தனர்.
மாறாக, பசுமை வாயு வெளியேற்றமே பூமி வேகமாக வெப்பமடைவதற்குக் காரணம் என்பது 98 விழுக்காடு உறுதிச் செய்யப்பட்டது.
இதன் விளைவாக, 1.5 பாகை வெப்பமடைதல் என்ற வரம்பை உலகம் 2030-ஆம் ஆண்டுக்குள் கடந்து விடும் அபாயம் உள்ளது.
இது நடந்தால், பனிக்கட்டிகள் உருகி, கடல் மட்டம் உயரும் நிலையில், கடலோர பகுதிகள் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கும்.
எனவே, கார்பன் வாயு உமிழ்வை உடனடியாக குறைத்து, பசுமை எரிசக்திக்கு நாம் மாறாவிட்டால், பேரழிவு நெருங்கிவிட்டதாக அர்த்தம் என அறிவியலாளர்கள் பீதியை கிளப்பியுள்ளனர்…



