கோலாலம்பூர், ஏப்ரல் 4 – கடந்தாண்டு நெடுகிலும், நாடு முழுவதும் உள்ள, அரசாங்க சுகாதார மையங்களில், 23 மில்லியன் பேர் சிகிச்சை பெற்றனர்.
அதன் வாயிலாக, சுகாதார அமைச்சு கடந்தாண்டு மொத்தம் 525 மில்லியன் ரிங்கிட் கட்டணத்தை வசூல் செய்ததாக, சுகாதார துணையமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் தெரிவித்தார்.
அரசாங்க சுகாதார மையங்களில் சிகிச்சை பெற்றவர்களில், 3.11 விழுக்காடு குடிமக்கள் அல்லாதவர்கள், 30 விழுக்காட்டினர் குடிமக்கள், ஒரு விழுக்காடு வெளிநாட்டவர்.
அதே சமயம், கடந்தாண்டு அரசாங்க சுகாதார மையங்களில் சிகிச்சை பெற்ற உள்நாட்டவர்களிடமிருந்து, 268 மில்லியன் ரிங்கிட் கட்டணமாக வசூலிக்கப்பட்ட வேளை ; வெளிநாட்டவர்களுக்கு 257 மில்லியன் ரிங்கிட் கட்டணமாக விதிக்கப்பட்டது.
மேலவை கேள்வி நேரத்தின் போது, லுகானிஸ்மான் அவ்வாறு கூறினார்.