புத்ராஜெயா, மே 27 – 2023-ஆம் ஆண்டு SPM தேர்வெழுத பதிந்து கொண்ட பத்தாயிரத்து 160 மாணவர்கள், அந்த தேர்வை எழுதவில்லை.
கடந்தாண்டு தேர்வெழுத நாடு முழுவதும் இருந்து மூன்று லட்சத்து 83 ஆயிரத்து 685 பேர் பதிந்து கொண்ட வேளை ; அதில் மூன்று லட்சத்து 73 ஆயிரத்து 525 பேர் மட்டுமே, குறைந்தது ஒரு பாடத்திற்கான தேர்வையாவது எழுதியதாக, கல்வி தலைமை இயக்குனர் அஜ்மான் அட்னான் தெரிவித்தார்.
தேர்வெழுத வராதவர்கள், ஏன் வரவில்லை என்பது ஆராயப்பட வேண்டும். அப்பிரச்சனைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை செயல்படுத்த, அது அவசியம் என அஜ்மான் குறிப்பிட்டார்.
2022-ஆம் ஆண்டைக் காட்டிலும், 2023-ஆம் ஆண்டு SPM தேர்வெழுத பதிந்து கொண்டவர்களின் எண்ணிக்கை சரிவு கண்டிருக்கும் வேளை ; அதில் பலர் தேர்வெழுத வராதது கட்டாயம் ஆராயப்பட வேண்டிய விவகாரம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
2022-ஆம் ஆண்டு மூன்று லட்சத்து 88 ஆயிரத்து 832 பேர் SPM தேர்வெழுத பதிந்து கொண்ட வேளை ; அதில் 3.8 விழுக்காட்டினர் அல்லது 14 ஆயிரத்து 858 பேர் தேர்வெழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.