Latestமலேசியா

2027 பட்ஜெட்: சமூகப் பராமரிப்பை வலுப்படுத்த RM4.355 பில்லியன் ஒதுக்கீடு – அமைச்சர் நேன்ஸி வரவேற்பு

கோலாலாம்பூர், அக்டோபர்-14,மடானி அரசாங்கத்தின் 2027 பட்ஜெட்டின் கீழ், மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சான KPWKM-முக்கு 4.355 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டத்தோ ஸ்ரீ நேன்ஸி ‌ஷுக்ரி அதனைப் பெரிதும் வரவேற்றுள்ளார்.

மக்களின் நல்வாழ்வை உறுதிச் செய்ய, விரிவான சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பையும் பராமரிப்புச் சூழலையும் வலுப்படுத்துவதில் அரசாங்கம் கொண்டுள்ள தொடர் அர்ப்பணிப்பை இந்த ஒதுக்கீடு வெளிப்படுத்துவதாக அவர் சொன்னார்.

மொத்த ஒதுக்கீட்டில், 4.19 பில்லியன் ரிங்கிட் நிர்வாகச் செலவினங்களுக்காகவும், 157.03 மில்லியன் ரிங்கிட் வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதி முறையாகப் பயன்படுத்தப்பட்டு, அமைச்சின் திட்டங்கள் அனைத்தும் பெண்கள், குழந்தைகள், குடும்பங்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பின்தங்கிய நிலைகளில் உள்ள இலக்கு வைக்கப்பட்டோருக்கு முழு பலனை அளிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் என, நேன்ஸி உத்தரவாதம் அளித்தார்.

மலேசியா மடானி மற்றும் 13-ஆவது மலேசியத் திட்டத்தின் இலக்குகளுக்கு ஏற்ப, பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் அதிகாரமளித்தலை அடிப்படையாகக் கொண்ட சமூக மேம்பாட்டு அணுகுமுறையை அமைச்சு தொடர்ந்து வலுப்படுத்தும் என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!