Latestமலேசியா

2027 பள்ளித் தவணை: ஜனவரி 4-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

புத்ராஜெயா, அக்டோபர்-3,2027-ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணை, ஜனவரி 4-ஆம் தேதி தொடங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய மற்றும் அரசாங்க உதவி பெறும் பள்ளிகளுக்கான கல்வி நாட்காட்டியின்படி, A குழுவைச் சேர்ந்த கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு மாநிலங்களில் பள்ளி தவணை ஜனவரி 4 முதல் டிசம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறும்.

இதர மாநிலங்கள் மற்றும் கூட்டரசுப் பிரதேசங்களை உள்ளடக்கிய B குழுவில், பள்ளி தவணை ஜனவரி 4 முதல் டிசம்பர் 3-ஆம் தேதி வரை நடைபெறும்.

இதனிடையே, நோன்புப் பெருநாள், சீனப் புத்தாண்டு, தீபாவளி, ஹஜ்ஜுப் பெருநாள், காமாத்தான், காவாய், விசாக தினம் மற்றும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கான விடுமுறை தேதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

சில முக்கிய பண்டிகைகளுக்காக வழங்கப்படும் கூடுதல் விடுமுறை நாட்களுக்கு மாற்றாகப் பள்ளிகள் வேறு நாட்களில் செயல்பட வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2028-ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணை நாடு முழுவதும் ஜனவரி 3-ஆம் தேதி தொடங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!