Latestமலேசியா

2027 பட்ஜெட்டில் ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு RM858 மில்லியன் நிதி ஒதுக்கீடு; அமைச்சர் ஏரன் வரவேற்பு

கோலாலம்பூர், அக்டோபர்-11 – 2027 பட்ஜெட்டில், தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு 858 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது கடந்தாண்டை விட 11.82 விழுக்காடு அதிகமாகும்.

​சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதே நாட்டின் நீண்டகால இலக்கு எனக் கூறி, ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் இதனை வரவேற்றுள்ளார்.

​இதன் மூலம், ருக்குன் தெத்தாங்கா தொண்டூழியப் படைக்கான வருடாந்திர மானியம் 6,000-லிருந்து 10,000 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டு, 78.3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

​மேலும், ‘Kembara Negara Bangsa’ திட்டத்திற்கு 48 மில்லியன் ரிங்கிட்டும், தேசிய ஜவுளி அருங்காட்சியகத்தை மாற்றியமைத்தல் மற்றும் வரலாற்றுத் தளங்களை மேம்படுத்துவதற்கு 90 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேற்பட்ட நிதியும் வழங்கப்படவுள்ளது.

​தவிர, வரலாற்று ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் பாலர் பள்ளிகளில் நவீன கற்றல் வசதிகளை மேம்படுத்துவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

​ஒற்றுமையான, மலேசியா மடானி சமுதாயத்தை உருவாக்குவதே இதன் தலையாய நோக்கம் டத்தோ ஏரன் அறிக்கையில் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!