Latestமலேசியா

2027 பட்ஜெட்: பெண்களின் தொழில்முனைவு மற்றும் நலனுக்கு RM200 மில்லியன்; மகப்பேறு விடுப்பும் அதிகரிப்பு

கோலாலாம்பூர், அக்டோபர்-14,பெண்கள் வருமானம் ஈட்டவும், குடும்பப் பொறுப்புகளுடன் தொழிலையும் சமநிலைப்படுத்தவும் உதவும் 2027 பட்ஜெட் முன்னெடுப்புகளை, மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு பெரிதும் வரவேற்றுள்ளது.

திறமை இருந்தும் முதலீடு இல்லாத பெண்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, பயிற்சி, உபகரணங்கள் மற்றும் சந்தை வாய்ப்புகளை இணைப்பது மிக அவசியம் என அமைச்சர் டத்தோ ஸ்ரீ நேன்ஸி ஷுக்ரி கூறியுள்ளார்.

இதன் கீழ், பெண்கள் உள்ளிட்ட 40,000 பேருக்கு உபகரணங்கள் மற்றும் பயிற்சிகள் வழங்க ‘Geran Sejahtera MADANI’ திட்டத்தின்ம மூலம் RM200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘KIRANA’ திட்டத்தின் மூலம் தொழிற்பயிற்சி, உபகரணங்கள் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

அதேவேளை, வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கு உதவும் வகையில் அரசு வளாகங்களில் உள்ள குழந்தைப் பராமரிப்பு மையங்களுக்கு RM20 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பெண்களுக்கான மொத்த மகப்பேறு விடுப்பு 360-லிருந்து 490 நாட்களாக உயர்த்தப்படுகிறது; ஒரு பிரசவத்திற்கு அதிகபட்சமாக 98 நாட்கள் வரை விடுப்புப் பெறலாம்.

பெண்கள் பொருளாதார ரீதியாக மேம்படவும், வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாகச் சமநிலைப்படுத்தவும் இந்த முன்னெடுப்புகள் உறுதுணையாக அமையும் என அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!