Latestமலேசியா

53 நாட்களாக ஜோகூரை வாட்டும் புகைமூட்டம்; அவசர ஆசியான் கூட்டத்திற்கு மந்திரி பெசார் வலியுறுத்தல்

ஜோகூர் பாரு, அக்டோபர்-17,ஜோகூர் மக்கள் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் 53 நாட்களாக தொடர்ந்து புகைமூட்டச் சூழலை எதிர்கொண்டுள்ளனர்.

சில பகுதிகளில் API எனப்படும் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு ஆரோக்கியமற்ற மற்றும் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காசி எச்சரித்துள்ளார்.

இது பொது மக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக, மாநிலப் பேரிடர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திக்குப் பிறகு அவர் சொன்னார்.

இந்த எல்லை கடந்த புகைமூட்டத்திற்கு இந்தோனேசியாவில் உள்ள வெப்பப் புள்ளிகளே முக்கியக் காரணமாகும்.

ஆசியான் சிறப்பு வானிலை ஆய்வு மையமான ASMC-யின் தரவுகளின்படி, களிமந்தானில் 453 வெப்பப் புள்ளிகளும், சுமத்ராவில் 153 வெப்பப் புள்ளிகளும் கண்டறியப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, தீயைக் கட்டுப்படுத்துதல் மற்றும் எதிர்காலத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த ஆசியான் நாடுகள் உடனடியாக அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என ஓன் ஹாஃபிஸ் வலுவாக வலியுறுத்தியுள்ளார்.

அதே சமயம், பொது மக்களும் அனைவரும் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!