Latestஉலகம்

2030-ல் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் அதி தீவிரம் காட்டி வரும் சீனா

பெய்ஜிங், டிசம்பர்-3 – 2030-ஆம் ஆண்டில் நிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திலிருக்கும் சீனா அதற்கான ஆயத்தங்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

நிலவின் மேற்பரப்பில் ஒரு தளத்தை உருவாக்குவதே சீனாவின் கனவுத் திட்டமாகும்.

இதன் மூலம், இதுவரை பார்த்திராத அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை அடைவதை சீனா நோக்கமாகக் கொண்டுள்ளது.

பூமி-நிலா இடையிலான இருவழிப் பயணங்கள் மற்றும் குறுகிய காலம் அங்கேயே தங்கி
நிலவின் மேற்பரப்பை ஆராய்வது என முக்கியத் திட்டங்களை வகுத்து பெய்ஜிங் செயலாற்றி வருகிறது.

ஆயத்த நடவடிக்கைகள் குறித்து சற்று மேலோட்டமாகக் கூறிய சீன விண்வெளி நிறுவனம், நிலவில் வீரர்கள் நடமாட ஏதுவாக விண்கலத்தை இறக்கவும், ஆராய்ச்சிப் பணிகளுக்கு உதவ ரோபோ எனப்படும் மனித இயந்திரங்களைப் பயன்படுத்தவும் உத்தேசித்துள்ளதாகக் கூறியது.

அது தவிர்த்து, நிலவில் அமைக்கப்படவுள்ள தளத்தில் ஆராய்ச்சி பிரிவை ஏற்படுத்தி, அங்கு பெரிய அளவிலான அறிவியல் சோதனைகளைச் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதே சமயம் நிலவின் வளங்களை ஆராய்ந்து அவற்றைப் பயன்படுத்தும் சாத்தியங்கள் குறித்தும் யோசிக்கப்படும் என அந்நிறுவனம் கூறிற்று.

தனது விண்வெளி கனவை நனவாக்கும் முயற்சியில், Tiangong விண்வெளி நிலையைத்தை அமைத்து, ஒவ்வொரு மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மூவரடங்கிய விண்வெளி வீரர்கள் குழுவை  சீனா சுழல் முறையில் அனுப்பி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!