Latestவிளையாட்டு

2030 காமன்வெல்த் போட்டியை ஏற்று நடத்துகிறது இந்தியா!

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றிருக்கிறது. அப்பிரசித்தி போட்டி இந்தியாவின் அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. ஸ்காட்லாந்தின் (Scotland ) Glasgow நகரில் நடைபெற்று வந்த 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில், காமன்வெல்த் போட்டிக்கான அதிகாரப்பூர்வக் கொடி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

காமன்வெல்த் கொடியை இந்திய ஒலிம்பிக் தங்கப் பதக்க வீரர் நீரஜ் சோப்ரா, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் P.T. Usha ஆகியோருக்கு பிறகு இறுதியில் குஜராத் துணை முதலமமைச்சர் Harsh Sanghavi பெற்றுக் கொண்டார்.

இந்தியா 2010-ஆம் ஆண்டு புதுடெல்லியில் காமன்வெல்த் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது. தற்போது 2030-ஆம் ஆண்டு அகமதாபாத்தில் மீண்டும் நடத்தவிருக்கிறது. இதன் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நடத்தும் இரண்டாவது நாடு என்ற வரலாற்றுச் சிறப்பை இந்தியா பெறுகிறது.

இவ்வேளையில் நேற்று 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி அதிகாரப்பூர்வமாக பிரம்மாண்ட நிறைவு விழாவுடன் முடிவடைந்தது. அதில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை ஈட்டி 4 ஆவது இடத்தைப் பிடித்தது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா ஆகியவை முதல் மூன்று இடங்களை வென்றன. மலேசியா 8 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி பத்தாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!