பூசான், ஜூன் 3 – தென் கொரியாவில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற, இவ்வாண்டின் 21-வது பூசன் மெட்ரோபொலிட்டான் ஐஸ் ரிங்க் பெடரேஷன் பிரசிடென்ட் கிண்ண சாம்பியன்ஷிப் போட்டியில், நாட்டின் இளம் “ஸ்கேட்டிங்” தாரகை ஸ்ரீ அபிராமி பி.சந்திரன், இரண்டாவது தொடர் வெற்றியை பதிவுச் செய்துள்ளார்.
இவ்வாண்டு,.14 கிளப்புகளை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான போட்டியாளர்கள், பிரசிடென்ட் கிண்ண சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற வேளை ; அதில் ஸ்ரீ அமிராமி முதல் இடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அதன் வாயிலாக, இவ்வாண்டு இதுவரை மட்டும், தென்கொரியாவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கேற்று ஸ்ரீ அபிராமி இரு தொடர் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளதாக, அவரது தந்தை சந்திரன் தெரிவித்தார்.
கடந்தாண்டு அதே அரங்கில் நடைபெற்ற ஓபன் பேசிக் நோவிஸ் பிரிவில் முதலாவதாக வந்தவர், இவ்வாண்டு இட்டர்மீடியன் நோவிஸ் பிரிவில் முதலாவது இடத்தை பிடித்து நம் நாட்டிற்குள் சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஸ்ரீ அபிராமி ஆறு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.