ஹோங் கோங், நவம்பர்-30, Duct-tape பிளாஸ்டரால் சுவற்றில் ஒட்டப்பட்ட ஒற்றை வாழைப்பழத்தை, 27.5 மில்லியன் ரிங்கிட்டுக்கு ஏலத்தில் எடுத்து வியப்பில் ஆழ்த்திய சீனாவைச் சேர்ந்த கிரிப்தோ நாணயத் தொழிலதிபரான ஜஸ்டின் சன் (Justin Sun), வாக்குறுதி அளித்தபடி அதனைச் சாப்பிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை, ஹோங் கோங்கின் பணக்கார ஹோட்டலில் ஏராளமான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்கள் முன்னிலையில்
அந்த வாழைப்பழத்தைச் சாப்பிட்ட ஜஸ்டின், தன்னிகரற்ற கலைப்பொருள் என அதை வருணித்தார்.
மற்ற வாழைப்பழங்களை விட இந்த ‘கலைநயமிக்க’ வாழைப்பழம் ருசியாக இருப்பதாக அவர் புகழ்ந்தார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு ஒரு thug tape பிளாஸ்டர் பந்தும், ஒரு வாழைப்பழமும் நினைப்பரிசாக வழங்கப்பட்டன.
இத்தாலியக் கைவினைக் கலைஞரான மவுரிசியோ கட்லெலனின் (Mauricio Cattelan) கடந்த வாரம் அமெரிக்கா நியூ யோர்க்கில் நடத்திய ‘காமெடியன்’ எனும் கருத்தியல் கலைப்படைப்பில், அந்த வாழைப்பழம் ஏலத்தில் விடப்பட்டது.
ஏழு பேர் ஏலத்தில் பங்கேற்ற நிலையில், 34 வயது ஜஸ்டின் 27.5 மில்லியன் ரிங்கிட் கொடுத்த அந்த வாழைப்பழத்தை ஏலத்தில் எடுத்தார்.